42
உயர்நீதி மன்றத்தில்தான் முன் விசாரணை செய்து பெட்டகத்தில் எழுதிக் காப்பிடப்பட்ட விசாரணைக் குறிப்பை வாசித்து, உண்மை காணச் சிந்திப்பர். எல்லா வினாவிடைகளும் முன்னதாகவே விசாரிக்கப்பட்டுச் சாரமானவை தொகுத்து எழுதப்பட்டு விட்டமையால் இந்த வெட்டவெளி நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை என்பது பெரிதும் நடவாது. மேலும் இக்காலத்தைப் போலத் தனி முறையில் சட்டம் பயின்ற பட்டதாரிகள் அக்காலத்தில் இலர். ஆதலின், வழக்கிற்குரியவர் தம் தம் கருத்தைத் தாமே கூறவேண்டியவராயிருந்தனர்.
இது நல்ல முறைதான். தாமே கூறினால் தான் தம் கருத்தைத் தட்டுத் தடையின்றிக் கூற இயலும் இதற்குக் காரணம் தாய் மொழியில் அரசியல் அலுவல்கள் அனைத்தும் நடத்தப்பட்டதனால் என்க. பொதுமக்கள் தங்கள் கருத்தைத் தடையின்றிக் கூறத் தாய் மொழி ஏற்றதாய் இருந்தது. அவ்வாறின்றி இக்காலத்தில் வேற்று மொழியில் நடத்தப் படுதலின், வழக்கறிஞர் உதவி இன்றியமையாததாய் விட்டது.
பேச இயலாதவர்கள் தாம் கூறவேண்டிய அனைத்தையும் நன்கு எழுதப் பழகிய ஒருவரிடம் கூறி, எழுதி வாசிக்க இடம் அளித்திருந்தனர். இக் காலத்திலும் பேரறிஞர்கள் தாம் கூற விரும்பும் பொருளை எழுதி வாசித்தலைக் கண்கூடாகக் காணலாம். வழக்குத் தொடுத்தவரும் வழக்கிற்குரியவரும் தம் தம் வழக்கை வெல்லுவதற்கு வேண்டிய குறிப்புக்களைக் குறித்துக் கொண்டு பேசுவர். தம்