பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

எதினிய மக்கள் கடற்படையிலும் போரிலும் தலை சிறந்து விளங்கியதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று கடலில் செலுத்தும் கலத்தை அமைக்கும் நுண்ணறிவாளர்களை இவர்கள் கொண்டிருந்ததேயாகும்.

போர் வீரனின் கடமைகள்

ஏதென்ஸ் நகரவாசிக்கு இருக்கும் பொறுப்புக்கள் பலவற்றுள் படைஞருள் ஒருவனால் இருக்கும் பொழுது நடந்துகொள்ளும் பொறுப்பு அதிகமாகும். இஃது இன்றியமையாததுமாகும். உள்நாட்டுப்போர்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் ஏதென்ஸ் நகர மக்கள் ஸ்பார்ட்டர்களோடு நீண்ட போரினை மேற்கொண்டனர்.

ஒவ்வோர் ஏதென்ஸ் நகரவாசியும் தன் பதினெட்டாம் ஆண்டில் ஒரு படையில் சேர்ந்து, இரண்டாண்டுகள் பயிற்சி பெறவேண்டும். இதில் சேருமுன் தன் நீதி, தவறா நிலைமையையும், தைரியத்தையும் குறித்துச் சத்தியம் செய்யவேண்டும். இஃது இப்போது சாரண இயக்கத்தில் சேருபவர் செய்யும் சத்தியம் போன்றது. இதிலிருந்து ஒவ்வொரு மக்களும் நீதிக்கும் சத்தியத்திற்கும் பயந்து நடக்க வேண்டுமென்பது தெரிகின்றது. இப் பயிற்சி பெற்ற இரண்டாண்டிற்குப் பிறகு ஒரு படைக் குழுவில் கலந்து கொண்டு பணி புரியவேண்டும். இப் பயிற்சி பெற்றவர் எப்பொழுதும் சண்டைக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும் ஒவ்வொருவரும் அறுபது வயது