53
இக்கடைகள் நிறைந்த இடங்களில்தான் பெரிய பெரிய கட்டடங்களைக் காணலாம். இங்குத் தான் சிறு சிறு கடைகள் நிறைந்து காணப்படும். பல்வேறு இடங்களில் இருப்பவர்களும் இங்கு வந்து தம் சரக்குகளை விற்றுப் பணமாக்கிச் செல்வர். பணம் வட்டிக்குக் கொடுத்து வாங்கும் சவுக்கார்களும் இங்குத்தான் வருவர். இந்த இடமே அரசியல், தத்துவம் முதலிய பொருள்களைப் பற்றி ஒருவருக்கொருவர் உரையாடற்குரியது.
‘வைகறைத் துயிலெழு’ என்னும் தமிழ்நாட்டுப் பழக்கம் எதினிய மக்கள் பாலும் இருந்தது. எழுந்ததும் கால உணவை முடித்துக் கொள்வர். காலையில் எழுந்ததும் குளித்து முழுகிக் கடவுளைத் தொழுதல், அதன் பின் உண்ணல் என்பது இவர்பால் கட்டாயம். இல்லைபோலும் இவர்களது காலை உணவு ஒரு துண்டு ரொட்டி ஆகும். அதனைத் திராட்சைச் சாற்றில் தோய்த்து உண்பர். பிறகு வெளியே புறப்பட்டுச் சந்தைக்குச் செல்வர். இடைவழியில் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதும் உண்டு. வெளியே செல்பவர் பெரும்பாலும், கையில் ஒரு கழியுடன் புறப்படுவர். கழி இருத்தலின் இன்றிய மையாமையை நாமும் நன்கு உணர்ந்திருக்கிறோம்.
இவர்களோடு இவர்களிடம் வேலைசெய்யும் இரண்டோர் அடிமைகள் தொடர்ந்துவருவதுண்டு. தெருவில் நடக்கையில் நன்கு கம்பீர்த்தோடு நடப்பர். சுறுசுறுப்பின்றிச் சோம்பி நடத்தலை இவர்கள் வெறுத்தனர். ஏறுபோல் பீடு நடை இவர்பால் இருந்தது. தினமும் முடி திருத்தும் அகத்திற்குச்