பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

திராட்சைச் சாற்றையும் கொடுப்பர். வெறும் திராட்சைச் சாற்றைப் பருகாமல் அதனோடு தண்ணீர் கலந்தே பருகுவர். இவ்வளவு தண்ணீரதான் கலக்க வேண்டும் என்பதை விருந்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவரைத் தலைவராக நியமித்து, அவர் கூறிய அளவுக்கு அந்நீரைக் கலப்பர். பொதுவாக எவ்வளவு திராட்சைச் சாறு இருக்கிறதோ, அதற்கு இரண்டு மடங்கு நீரைக் கலந்து வந்தனர். இவ்வாறு கலக்கும் தொழில் அடிமை ஆட்களால் நடைபெறும். இதன்பின் குவளைகளில் ஊற்றப்பட்டு இந்த மது யாவர்க்கும் அளிக்கப்படும். கிரேக்கர் இந்த மதுவைத் தாம் இன்பமாகவும் சுறுசுறுப்பாகவும் தம்மை மறந்தும் இருப்பதற்காக அருந்துவர். அடிமைச் சிறுவர்களும் சிறுமியர்களும், இந்நேரங்களில் ஆடல் பாடல்களை நிகழ்த்தி விருந்தினர்க்கு இன்பமூட்டுவர். விருந்திற்குப் பிறகு நிகழ்ந்ததைச் சேரர் பெருமான் சுந்தரர்க்கு இட்ட விருந்தில் நாம் காண்கிறோம்.

“பாடல் ஆடல் இன்னியங்கள் பயிறல் முதலாப் பண்ணையினில்
நீடும் இனிய வினோதங்கள் நெருங்கு காலந் தொறும் நிகழ’,

என்று பெரிய புராணம் புகழ்கிறது.

இன்பமாக உரையாடுபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவர். இன்றியமையாத செய்திகளைப்பற்றிய விவாதங்களுக்கும் இதுவே இடமாகவும் அமையும். இந்தத் தருணத்தில்தான் அழகு, அன்பு என்னும் பொருள்பற்றிய ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்ததாக அவர்கள் நூலால்