திருவளர்ந்தோங்கும் இந்நிலவுலகில் பல்வேறு நாடுகள் தோற்றம் அளிக்கின்றன. அவற்றுள் ஒன்று கிரீஸ் நாடாகும். அஃது எல்லாப் படியாலும் சிறந்து விளங்குகிறது ; காலத்தால் முந்தியது; கலையால் தலைசிறந்தது. இந்நாடு தமிழ் நாட்டோடு போட்டி இடவும் வல்லது ; இலக்கிய வளத்திலும் நாகரிக வாழ்விலும் ஒப்புயர்வற்றது. ஆகவே, அந்நாட்டு ஒழுகலாற்றை ஒருவாறு உணரவேண்டியது நம்மனோர் கடனாகும். ‘அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்’ என்று எண்ணுவதுபோல் நம் நாட்டுப் பெருமையும் சிறப்பும் மட்டும் அறிந்திருப்பதில் பயனில்லை. பிற நாட்டு வரலாற்றையும் நன்குணர்ந்து. பின் இரண்டினையும் சீர்தூக்கிக் காண்பதே அறிவுடைமையாகும். ஆகவே, கிரேக்க நாட்டு வரலாற்றைத் துணையாகக் கொண்டு, அதனை ஈண்டு அறிவோமாக.
அக்கேயர்கள் கிரீஸ் நகர் வருகை
கிருஸ்துப் பெருமான் பிறப்பதற்குப் பதின் மூன்று நூற்றாண்டுகட்கு முன், அஃதாவது ஏறக்