67
கடைகளில் வேலை புரியும் அடிமைகள் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில், வேறு இடங்களிலும் சென்று வேலை செய்து வருவாய் பெற ஏதென்ஸ் நகரினர் இடங் கொடுத்திருந்தனர். இவ்வாறுவேலை செய்து தேடிய பொருளைச் சேமித்து வைத்துத் தம்மை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினரோ, அந்தத் தொகையை முதலாளிக்குச் செலுத்தி விடுதலை பெற இவர்களுக்கு வசதி இருந்தது; சிற் சில இடங்களில் அடிமைகள் பல்லாண்டு உழைத்து நற்பெயர் எடுத்தால் அவர்களிடமிருந்து யாதொரு பணமும் பெறாமல் விடுதலை செய்தலும் உண்டு. இவ்வாறு விடுதலை பெற்ற அடிமைகள் ஏதென்ஸ் நகரை விட்டுப் போய் விடவேண்டுமென்னும் நியதியும் இல்லை. அவர்கள் அவ்வூரிலேயே இருந்து கொண்டு, அவ்வூர் வாசிகள் பெறக்கூடிய உரிமை, வசதி, இன்பம் ஆகியயாவும் பெற்று மகிழ்வாக வாழ வசதி அளித்திருந்தனர். இவர்களுள் விடுதலை பெற்ற ஓர் அடிமை, ஏதென்ஸ் நகரில் பிறந்த சவுக்கார் போல, அதாவது பணம் வட்டிக்குக் கொடுத்து உதவுபவனாகவும் இருந்ததாக அவர்கள் வாழ்க்கைச் சரித்திரம் ஒன்றால் அறிகிறோம்.
துன்புத்தை அநுபவித்த அடிமைகளும் ஏதென்ஸ் நகரில் இருந்தனர்; அவ்வடிமைகள் நிலச் சுரங்கங்களில் வேலை செய்பவராவர். அவர்கள் ஆழத்தில் ஆடையின்றிச் செல்ல வேண்டும். கையில் விளக்கைக் கொண்டு அச் சுரங்கங்களில் வெள்ளி கிடைக்கக் கூடிய மண்ணையும் இடத்தையும் தேடவேண்டும். சுரங்கத்தில் செய்யும் வேலைக்கு நேரம் என்பது இல்லை. இரவும் பகலும் வேலைதான்