பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இன்னோரன்ன தொழில்களே யன்றி, ஆடு, மாடுகளை மேய்த்து வயிறு வளர்த்த ஆயர்களும், மலைகளில், காடுகளில் மரங்களைக் கொளுத்தித் தீக்கிரையாக்கி விற்று வாழ்வு நடத்தியவர்களும் இம் மக்களிடையே இருந்தனர். நாம் நகரத்திலிருந்து, கொண்டு நாட்டுப்புற வாசிகளைச் சிறிது வேருகக் கருதுவது போல, ஏதென்ஸ் நகரவாசிகளும் கிராம வாசிகளைச் சிறிது அசட்டையாகவே பார்த்து வந்தனர். நகர வாசிகளின் நவீன நாகரிகச் செருக்கே இதற்குக் காரணம் ஆகும்.

ஒரு நாட்டின் தொழிலும் வாணிகமும் சரிவர நடக்க வேண்டுமானால், செலாவணி செம்மையாக இருத்தல் வேண்டும். இச்செலாவணி பண்ட மாற்றாகவோ நாணயமாகவோ அமையலாம். முன்னாளில் செலாவணி எம்முறையில் இருந்தது என்பதை அறிவது ஒர் ஆர்வமுடைய செயலாகும். ஸ்பார்ட்டா நகரில் உலோகப் பொருள்கள் கட்டி கட்டியாகச் செலாவ்ணிப் பொருளாக இருந்து வந்தன. நாள் ஆக ஆக இந்தக் கட்டியான உலோகத்தின்மீது இந்தக் கட்டிக்கு இவ்வளவு நிறை உண்டு என்பதை உணர்த்தத் தக்க முத்திரை பொறிக்கப்பட்டது.

அட்டிக்கா நகரத்து நாணயங்கள் வெள்ளியால் இயன்றவை. அவற்றின் ஒருபுறம் அதினா (Athena) தலையும், மற்றொரு புறத்தில் கிழஆந்தையின் வடிவும் அமைந்தனவாக இருந்தன. பாரசீகர்கள் (Persians) கையாண்ட பொன் நாணயமாகிய டாரிக்ஸ் (Darics) என்பன ஏதென்ஸ் நகரில் புழங்