பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட குருக்களும், நிரந்தரமாக அந்தப் பதவியையும் பெற்றிருந்தவர் அல்லர். குறிப்பிட்ட காலம் கழிந்ததும், வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

இந்த முறை நம் நாட்டிலும் கையாளப்பட்டு வந்தால் பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் மனப் பான்மை நீங்கிச் சகோதர நேயமும் ஒருமைப்பாடும் நிலவும்.

கிரேக்க நாட்டில் குறிசொல்பவர்கள், சோதிடர்கள், பாடகர்கள், மருத்துவர்கள் ஆகிய தொழிலோர் இல்லாமல் இல்லை. மருத்துவர்கள் தம் மருத்துவ அறிவை, ஈஜிப்த் நகரினின்று பெற்றனர் என்பது ஊகிக்கப்படுகிறது. இந் நாட்டினர் பழைய நம்பிக் கையில் பெரிதும் நாட்டமுற்றிருந்தனர். இந் நம்பிக் கையின் மூலம் நோயையும் போக்கி வந்தனர். இவர் கள் அஸ்லியின்ஸ் (Asclepins) என்னும் பெயரால் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர். இத்தெய்வம் நோயைப் போக்கும் ஒரு தெய்வமாகும். ஆகவே நோய் கண்டவர்களை இத்தெய்வ உருவம் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் படுக்க வைத்து வந்தனர்.

இவ்வாறு படுக்கவைக்கப்பட்ட நோயாளியை அத்தெய்வம் பாம்பு வடிவில் இரவில் தோன்றி நோயுள்ள பாகங்களைத் தன் நாவால் நக்கி, நோயை போக்கிவிடுமாம். இதனால் கிரேக்க நாட்டு மருத்துவர், மருந்துகளைக் கையாளாமல் இல்லை. இவர்கள் வேர், மூலிகைகள், மேற் பூச்சு, பசை, களிம்பு முதலானவற்றைக் கொண்டு கையாண்டு வந்தனர்.