பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83


அமைந்திருந்தன. பயிற்சிகளை நன்கு பயில்வதற் கெனத்தனித்தனி வெளி இடங்கள் இருந்தன. இவ்விடங்களேயன்றிச் சிலம்பக் கூடங்கள் மரங்கள் அடர்ந்தவையாய், இயற்கை மறைவு பெற்றுக் குளிக்கவும், உடுக்கவும், தகுந்த வசதி பெற்றனவாக விளங்கின. பயிற்சியில் கலந்துகொள்பவர் திகம்பரர் போல இருந்து எண்ணெய் தேய்த்துக் கொள்வர். இவ்விடங்களில் ஒட்டம், குதித்தல், நிறைப்பொருள்கள் வீசி எறிதல் முதலான பயிற்சிகள் நடைபெறும். உயரக் குதித்தல் (High Jump) இவர்கட்குப் பழக்கமில்லை. நீளக்குதித்தலில் மட்டும் (Long lump) இவர்கட்குப் பயிற்சி இருந்து வந்தது. ஓடிவந்து தாண்டுதல் நம் நாட்டில் நடக்கும் பயிற்சி. ஆனால், ஏதென்ஸ் நகரப் பயிற்சியாளர்கள் நீளத் தாண்டுதலில் பங்கு கொண்டால், ஒடி வந்து தாண்டாமல், நிறையுள்ள பொருள்களைக் கையில்கொண்டு குதிக்கையில் தமக்குப் பின்னால் எறிந்துவிட்டுத் தாண்டுவர். இப்படிச் செய்வதால் தாமதமின்றிக் குதிக்கும் பயிற்சி ஏற்படுகிறதாம். யார் நீண்ட தொலைவில் இந்நிறைப் பொருள்களை எறிகின்றனரோ அவர்களே வெற்றி கொண்டவர் என்பது தீர்மானிக்கப்படும். குத்துச் சண்டையும் (Boxing) மற்போரும் பயிற்சிகளில் இடம் பெற்றிருந்தன. குத்துச் சண்டை நடைபெறுகையில், காதுவரை மூடிக் கொள்ளக்கூடிய தொப்பியும் கைகளுக்குத் தோல் உறையும் அணியப்படும். மற்போரைப் பற்றி நாம் ஒன்றும் கூறவேண்டுவதில்லை. இக்கால முறையையே அக்காலத்திலும் கைக்கொண்டனர். இந்தப் பயிற்சியின் ஒரு தனிச்சிறப்பு யாதெனில், ஒரே