பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84


சமயத்தில் மற்போரும் குத்துச் சண்டையும் நடப்பதுதான். இக்காலத்தில் குத்துச் சண்டைக்கென ஒவ்வியவர் குத்துச் சண்டைதான் புரியவேண்டும். ஆனால், அக்கால ஏதென்ஸ் நகர மக்கள் இருவர் குத்துச் சண்டைக்கென இறங்கினாலும், அவர்களே மற்போரும் புரியலாம். அஃது அதில் கலந்து கொண்டவருடைய மனத்தைப் பொறுத்ததாகும். இதனால் இவ்விரு பயிற்சிகளிலும் நன்கு தேர்ந்தவர்களே இதில் ஈடுபட வேண்டும் என்பது புலனாகிறது. ஆனால் இப்பயிற்சியில் கலந்து கொண்டவர் கடித்தல் கூடாது; கண்களில் அடித்தல் கூடாது. இவையே நிபந்தனைகள். இவ்விரு பயிற்சி பெற்றவர் தம் வல்லமையைக் காட்ட இறங்கிய போது இருவரில் ஒருவர் இறத்தலும் உண்டு. ‘விளையாட்டு வினையாயிற்று’ என்பது ஒரு பழமொழி தானே !

ஒலிம்பியாவில் ஐந்தாண்டுகளுக்கொரு முறை நடைபெறும் விளையாட்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த இடம் வன்மைக்குரிய தெய்வமான ஸீயஸ் (Zeus) கோயில் கொண்டுள்ள இடமாகும். இங்கு எல்லா இடங்களிலும் உள்ள விளயாட்டில் நற்பயிற்சி பெற்றவர்கள் யாவரும் வந்து சேர்வர்; சேர்ந்து போட்டியில் கலந்து கொள்வர். இக்காலத்திலும் இந்த ஒலிம்பியா என்னும் இடத்தில் குறி கூறுவர், யாசகர் முதலியோர் கூட்டம் கூட்டமாகக் கூடுவர். கலைஞரும், ஞானியரும் தம் அறிவைக் காட்டுமிடம் இதுவே ஆகும். இங்கு நடக்கும் விளையாட்டுக்கள் தெய்வக் குறிப்பையும் காட்டுவனவாகும். இந்த விளையாட்டுப் பந்தயங்கள் நடக்கை