பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86


முன்நாள் வரை உணவுக்கு வருந்தாதிருக்க, உணவு அளிக்கும் முறையும் இருந்து வந்தது. வெற்றி கொண்டவன் ஒரு சிறந்த வீரன் என்றும், பாராட்டிற்கு உரியவன் என்றும் கருதப்பட்டான். தெய்வமாகவும் வெற்றியாளர்களை மதித்தனர். இம்முறையில் சிறப்பிக்கப்படும் அர்ச்சுனன், மதுரை வீரன் முதலியவர் நம் நாட்டு வீரர் ஆவர். பல பந்தயங்களில் வெற்றி காண்பவர் பின் ஒரு பந்தயத்தில் ஈடுபட அதனை நன்கு பயிற்சி செய்து வந்தனர். இதனால், பல பந்தயங்களில் வெற்றி பெறுதலாகிய பெருமை நாளுக்கு நாள் குறைந்து தனித்தனிப் பந்தயங்களில் வெற்றி பெறுதலே சிறப்பாகக் கருதப்பட்டது. வெற்றி பெற்றவர் சில உருவிலும், கலை உருவிலும் நிரந்தரமாகப் பெருமை பெறும் முறையில், சிற்பிகளாலும், புலவர்களாலும், சிறப்பிக்கப்பட்டனர். இதுவே வீரர் வழிபாடு என்னலாம். இந்த வழிபாடு தமிழர்க்குரிய ஒரு தனிப் பழக்கமாகும். இதன் விரிவைப் புறநானூற்றில் பர்க்கக் காணலாம்.

கிரேக்கர் தம் இலக்கியமும் நாடகமும் ஆங்கிலப் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டனவாகும். ஆங்கிலேயர்கள் கூறும், செய்யுள் நாடகம் துன்பி usb (tragedy) @oriouso (comedy), utiliu obful இக்கலைகளுக்கெல்லாம் மூலம் கிரேக்க மொழி என்பதில் ஐயமில்லை. கிரேக்கர் தம் விசேட தினங்களில் விருந்துகள் நடத்துகையில் இன்பமாகப் பொழுது போக்குவதற்குப் பல விளையாட்டுக்களை நடத்துவதில் பெரு விருப்பமுடையவர்கள். இதில் ஒரு தனிப்பயிற்சியும் வாய்ந்தவர்கள் என்னலாம். திரு