பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


ஹெர்மஸ் (Hermes) நிதிக்குரிய தேவதையாகும். நாம் குபேரன் என்று கூறுவது இதற்குப் பொருத்தமாகும். அதை அன்றித் திருமகளையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். நிரம்பச் செல்வமுடையவரை நாம் குபேரர் சம்பத்தாய் வாழ்கின்றனர் என்றும், இலச்சுமி கடாட்சம் பெற்றவர் என்றும் கூறுகின்றோம்.

மாலுமிகள் பாசிடோன் (Poseldon) என்னும் தேவதையைக் கடற்கடவுளாகக் கருதினர். இது நாம் கூறும் வருணன் போன்ற தெய்வமாகும்.

நாம் ஆடிப் பட்டம் தேடிவிதை என்று கூறி நல்ல நாளில் விதைத்தலோ அறுவடை செய்தலோ நடத்துவது போலக் கிரேக்க உழவர்களும் நல்ல நாளில் விதைத்தலும், அறுவடை செய்வதிலும் கண்ணுங் கருத்துமாய் இருந்து வந்தனர். உழவர்கள் பருவந்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை முறையாகக் கொண்டனர். நாம் சனிதோறும் நீராடுகிறோமல்லவா?

இவர்களிடையே அப்டுரியா (Apaturia) என்னும் பண்டிகை சிறந்து விளங்கியது. இந்நாளில் குடும்பத்தினர் ஒன்றுகூடிப் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒருவர்க்கொருவர் வெகுமதி கொடுத்துக் கொண்டு நல்விருந்து அயர்வர். இவ்வாறு செய்து குடும்பத்தார் தமக்குள் ஒருவர்க்கொருவர் ஒற்றுமையாய் அன்பு நிலவி வாழ வழிசெய்வர்.

ஹீப்ரு மக்கள் மேற்கொண்ட சமயத்திற்கும், பண்டையக் கிரேக்கர் கைக்கொண்ட சமயக் கொள்கைக்கும், சிறிது வேறுபாடு இருந்து வந்தது. கிரேக்