பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93


கொடுக்கும் முறையை ஒத்ததாகும். இறந்தவர் ஆண்களாயின் நகைப் பெட்டியுடனும் குழந்தை களாயின் விளையாட்டுப் பொருளுடனும் காட்சி யளிக்கும் முறையில் உருவங்களை வைப்பர்.

இதுவே கல் எடுப்பு என்று நாம் தொன்று தொட்டு மேற்கொள்ளும் முறையாகும்.

ஆனால், நம் கல்லெடுப்பில், உருவத்தோடு இறந்தவர் பீடும் பெருமையும் பொறித்தல் இயல்பு. நோய் வாய்ப்பட்டும் வயது முதிர்ந்தும் இறப்பு ஏற்படுவதினும், போரில் இறப்பதையே கிரேக்கர் பெரிதும் விரும்பினர். இவ்வியல் தமிழரது இயல்புக்கு மிக மிகப் பொருத்த முடையது. கிரேக்கர் இயற்கையையும் வழிபடும் இயல்பினர்.

கிரேக்கர் வந்தனை வழிபாடு இயற்றும்போது சமயக் கொள்கையில் உள்ள மரபுப்படி தீட்சை பெற்றவர்களே வழிபட இடம் பெறுவர். இத்தீட்சை உணவு முறையில் ஏற்பட்டதாகும். கண்டதை உண்போர் வழிபாட்டிற்கு உரியவர் ஆகார். உடற்றுாய்மை, உளத்தூய்மை அவர்களுக்கு இன்றியமையாதவை. இவையும் நம் மதக் கொள்கையைப் போன்றவையே. அவர் வழிபாடு செய்யுங் காலங்களில் தூய வெள்ளிய ஆடையை உடுத்திக் கொள்வர். செல்லும் வழியில் இருள் நிறையில் ஒளி காணத் தம் கையில்வேண்டியபோது ஒளிதரும் கைவிளக்கைக்கொண்டு போவர். வழிபடச் செல்கையில் வாளாசெல்லாது தம் தெய்வங்களைப் பற்றிய அருட்பாடல்களே அகங் குழைய்ப் பாடிச் செல்வர். எல்லா வழிபாட்டிலும் பாடல் வழிபாடே சிறந்தது போலும்!