பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

xiii

‘பாவினை இன்றியும் பண்டிதர் உளரால்,’ என்று காப்புச் செய்யுளில் பாடியிருக்கிறார் பாவலர். பாட்டில்லாமல் ஒருவனைக் கற்றவன் என்றே சொல்ல முடியாது என்பது அவருடைய கருத்தாகும் பாட்டைப் படைக்க முடியவில்லையாயனும் அதனைத் துய்த்திடும் ஆற்றலையேனும் கற்றவன் பெற்றிருப்பான் என்பது அவருடைய எண்ணம் எனத் துணியலாம். இவ்வாறு பாடுகின்ற இடத்திலேயே "தேவனைப் பாடவும் திருவருள் வேண்டுமே என்று பாடிப் பாடுவதற்கு இறையருள் இன்றியமையாதது என்ற உண்மையினை அவர் வலியுறுத்துகிறார்.

தேவநேயரவர்கள் இளமைக் காலத்தில் செய்யப்பட்ட பாட்டுகள் இவைகள். அக்காலத்திலேயே அவருக்குப் பழைய தமிழ் நூல்களில் இருந்த ஈடுபாடு இந்த நூலின் வாயிலாகப் புலனாகிறது சான்றாக ஒன்று:

சிலப்பதிகாரத்தில், ஆய்ச்சியர் குரவையில், இடைக் குலப் பெண்கள் திருமாலைப் பாடிப் பரவுகிறார்கள்.

“சேவகன் சீர் கேளாத செலியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!”

“கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே”

“நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணாவென்னா நாவென்ன நாவே!”

என்று 'கோத்த குரவையுள்' தெய்வத்தை ஏத்துகின்றார்கள். இந்தப் பாட்டிலுள்ள தமிழிசையின்பம் பாவாணரவர்களை ஈர்த்திருக்கிறது. எனவே இந்த இனிய செந்தமிழ்த் தொடையைத் தம்மை உய்யக் கொள்ள வந்த இயேசு பெருமானுக்கு உரிமையாக்கிப் பாடுகிறார்கள். இந்த நூலில் குமரற் பராவல் என்ற தலைப்பின் கீழ் இப்பாடல்கள் வருகின்றன. ஒரு சில வரிகள்: