பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

         அனுபல்லவி 

கொடுபோ எகிப்து தாயொடே பின் நான் கூறுமட்டும் ஆங்கே குடிகூடவே (எ)

        சரணம் 

(ஏரோது இறந்தபின் தேவதூதன் சொல்வது) நெடுநாளாகின சேயைக் கொல்லவே நினைத்தார் இறந்தார் எழுந்தேக இனி விடுக யூதேயா ஏரோதின் மகன் வேந்தனானதினால் நாசரேத்தில் வாழ். (எ )

        9

இயேசுவின் இளமை 'தினமணி வம்ச' என்ற மெட்டு

         பல்லவி 

இளமையில் ஏசு இலகவே பெற்றோர் ஏவலில் நின்றார்

        அனுபல்லவி

எளியரெனாது தம் இறைமையுமெணாது குலவினை செய்தொரு குற்றமூளாது. (இ)

          சரணம் 

பெற்றவர் தகைமையைப் பிறர்வியந் தேத்த பெருந்தகை பேணி பெரியவர் பணிந்து நித்தனருள் ஞானம் நிலத்தவர் தயவினும் நிறைமதி நீர்மை நீட வளர்ந்தனர். (இ)


         10 
    திருமுழுக்கு 

'சங்கற்பமே' என்ற மெட்டு

        பல்லவி 

யோர்தான் நதி யோவன்னான் சம்மதி யூதகுல பதி யபிடேகவாதி

    அனுபல்லவி 

பாரில் தேவ வதி' பண்படூ உந்திதி பரம்புக மனந்திரும்புவார் கதி (யோ )