பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 கிறித்துவின் பாடுகளெல்லாம் இங்கு குறைவரப்பாடப்பட்டு இருக்கின்றன. கிறித்து மார்க்க சாரமான அன்பு (Love), ஊழி யம் (Service), தியாகம் (Sacrifice) என்னும் மூன்றும் சிலுவைப் பாடுகளிலேயே ஒருங்கு திரண்டு கிடக்கின்றன. கிறித்துவின் தெய்வீகத்தையே நம்பாத காந்தியுங்கூடச் சிலுவைத் தியானத்தினால் உலக முழுதும் நடுங்கத்தக்க வண்ணம் மேற்கூறிய மூன்று சக்திகளையும் பெற்றிருப்பாராயின் கிறித்துவையே மெய்த்தேவனென்று வணங்குங் கிறித்தவர் கள் அவரிலும் எத்துணையோ அதிகமாய் அச்சக்திகளை யடையலா மென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? உத்தம கிறித்தவன் ஒருவன் பிறப்பின் பண்டிகையி லும் உயிர்த்தெழுந்த திருநாளிலுங்கூடக் கிறித்துவின் பாடு களையே தியானிப்பான். கிறித்து பிறந்தும் உயிர்த்தெழுந் தும் முன்னமே ஆயிற்று. அவருடைய பாடுகளினால் மீட்புண் டானதே யன்றிப் பிறப்புயிர்த் தெழுதல்களால் மீட்புண் டாகவில்லை. கிறித்து பிறவாமல் எங்ஙனம் பாடுபட முடியு மென்று சிலர் கேட்பர். அது சரியே. ஆனால் கிறித்து பிறந் தும் பாடுபட்டிராவிடின் அவர் பிறப்பினால் என்ன புண்ணி யம்? ஆகவே மீட்புக்குக் காரணம் கிறித்துவின் பாடுகளே யென்பது வெள்ளிடை மலை போல் விளங்கவில்லையா? இனி, உயிர்த்தெழுதலோ தெய்வீகத்தா லுண்டானது; மகிமையும் இன்பமும் நிறைந்தது. அதனால் விசுவாசம் மட்டும் சிலர்க்கு உண்டாகும் அல்லது பலப்படும். மீட்போ சிலுவையிலேயே முடிந்துவிட்டது. 'முடிந்தது' என்ற திரு வாக்கே இதை வற்புறுத்தும். பிறப்பின் பண்டிகையும், உயிர்த்தெழுந்த திருநாளும் மகிழ்ச்சியும் இன்பமும் விளைக் கத்தக்கவை யாதலின், மீட்பு முழுதும் திரண்டு கிடக்கும் கிறித்துவின் பாடுகளைப் பற்றியும் கிறித்துவை மரண வேதனைப்படுத்தின தங்கள் பாவங்களைப் பற்றியும் கிறித்து வர்கள் எள்ளளவும் எண்ணாது போகின்றனர். பெரிய வெள்ளிக்கிழமையில் மட்டும் (தங்களுக்காக அல்ல) கிறித்து