பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 வுக்காகவே வருந்துவது போல் நடிப்பவரும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தில் (ஆத்துமார்த்தமாக அல்ல) சரீரார்த்தமாக அடையும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. ஆகையால் இடைவிடாத சிலுவைத் தியானத்தினாலேயே கிறித்தவர்கள் அன்பு, ஊழியம், தியாகம் என்ற மூன்று ஆற்றல்களையும் அடைதல் கூடும் என்பதை யறிந்து கொள்க. ஒவ்வொரு கிறித்தவனும் கிறித்தவர்களையல்ல, கிறித்து வையே பின்பற்றவேண்டும். இதுவே மீட்பின் வழி. கிறித்துவின் பாடுகளைப்பற்றி வேதநாயக சாத்திரி யாரும், இரத்தினப் பரதேசியாரும், பண்டிதர் சத்தியவாச கம் பிள்ளை அவர்களும் இயற்றிய கீர்த்தனைகள் மிகவும் அருமையானவை. அவற்றையும் படிப்பின் ஆத்துமாவிற் கானந்தமுண்டாகும். சிலுவைச் சிந்து கிறித்துவின் பாடுகளும் மரணமும் இராபோசனம், கெத்செமனேத்தியானம் 'என்னடி நான் பெற்ற மங்கை' என்ற மெட்டு பண்டிகையின் முதல் நாளை மாலை வேளை தம தாளை ஏவிப் பட்டினத்தில் ஒரு கேளை அளி பஸ்கா கொண்டாட வுன் விஸ்தார வீடெனப் பட்சமர் யேசுவுங் கேட்டார் உடன் சித்தமே செய்தனர் வீட்டார். உங்களிலொருவன் இரவே என்னைக் கரவே காட்டித் தரவே நேரும் உண்மை யென்றார் ஏசு குருவே பஸ்கா