பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 பஞ்ச பாதக பரிகாரம் அவர் படிவத்தி லைந்து காயம் பாரும் - திருப் பாதத்தே விழுந்தழுது பாவத்தை முனங்கழுவ வாரும் கண்ணீர் வாரும் 37 'மஞ்சுநிகர் குந்தளமின்னே' என்ற மெட்டு நெஞ்சமே நினைந்துபார் முன்னே - நிருதவீரர் குருசிலார நிந்தையா யறைந்த மாமன்னே-அந்த நீதனும் பெரு வேதனையுற மோது மென்பவ மேது செய்குவேன் நின்று முழங்காலில் நீடியே-அழுதலறித் தொழுதிடுவென் நேசமா மகாரை நாடியே முப்பதின்மேல் மூன்றும் அரையும் - பருவம்வரச் சிலுவையதில் மூப்பராசாரியர் அறையும் - ஒரு முள்ளின் மாமுடி யெள்ளவே பெருங் கள்ளனாயினர் வள்ள லேசுவும் முன்பு யூதர் கொண்ட மதமே முடியும் வரை ஒரு பிடியாய் முண்டு செய்து கண்ட வதமே பொந்தியு பிலாத்து பதியே புரையரினம் இரைய மனம் போலவே மயங்கும் விதியே - யூதர் புத்திரத்தையே பெற்றதில்லையோ எத்திறத்தவர் செற்ற தென்னையே புல்லியர்க்கே யிந்த ஞாலமே - புனிதமுள இனியகுண நல்லவர்க்கோ இல்லை காலமே