பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எம்மாவூருக்கிருவர் ஏகினர் சீடர் இடைவழி மருவினர் ஏசுவுங்கூடத் தம்மாலியன்றவரை தகவுரையாடத் தமையறியாது வழிபோகும் பெரு வேகம் கதிரேகும் இருளாகும் கோமகனுரைகளைக் கோளாளர் தெரிந்தார் கூறியபோதேயுளங் கொளுந்து விட்டெரிந்தார் சேமவிடியல் வரச் செல்லுமென்றிரந்தார் தேசிகனு மிணங்கி யிருந்தார் ஒரு விருந்தார் முற்று மருந்தார் உருக் கரந்தார் 41 பரமேறுதல் 'நீலகண்ட மகாதேவா' என்ற மெட்டு இராகம் - வசந்தா தாளம் -- ரூபகம் பல்லவி மேக வாகன மீதி லேறி மேசையாபர மேவி யேறும் அனுபல்லவி தேகமோடுயிர்த் தெழுந்து மேலே ஆக நாற்பதும் அருமை நாளே (மே) சரணம் ஆவலாய்ச் சீடர் அவனி நீட அணந்து நின்றனர் ஆற்ற வொண்ணுமோ தேவதூதரும் இவ்வகை ஏசு திரும்பு மென்றனர் தேற்ற வெண்ணியே (மே) 42 கிறித்து பிதாவின் வலதுபாரிசத்திலிருந்து பாவிகளுக்காக பரிந்து பேசுதல் 'நன்னுபாலிம்ப' என்ற மெட்டு பல்லவி மன்னியுந்தேவ மகிமை எகொவாவே மாந்தர் பாவமே