பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 அனுபல்லவி கனிதராமரமே கனலுற வேண்டாம் தொட்டே இனிதெரு விடுவேன் நான் இனுமொரே ஆண்டு மட்டே (ம சரணம் நிலவுலகேகி நிரப்பொடு நிந்தையாகி நிலந்தலை சாய்க்கவும் நிற்கவும் நேரமின்றிச் சிலுவையில் வேதனை சிறந்து பாடுபட்டுச் சிறுமையுடன் மரித்தே தீர்த்தனென் பாவப்பாரம் (ம) 1. தொட்டு -- தோண்டி, கொத்தி. 2. நிரப்பு வறுமை. 43 மெய்த்தெய்வம் 'அருட்சோதித் தெய்வமென்னை' என்ற மெட்டு பந்துவராளி - ரூபகம் நாதாந்தத் தெய்வமென்னை நாடிவந்த தெய்வம் நம்பனி டத்துயிரொளியும் நண்ணிய மெய்த்தெய்வம். ஏதேன் றன் இறைவன் பணி எதிருரைத்த தெய்வம் ஈசனடியார்களுமுன் இசைத்த பெருந் தெய்வம். வேதாந்த சூரியனாய் விளங்கிய மெய்த் தெய்வம் வியனிலத்தில் மாமிசமாய் விளைந்த மகத் தெய்வம். போதாந்தம் படவருக்கே புகன்றளித்த தெய்வம் பூமியெங்குந் திரிந்து நலம் புரிந்த பெருந் தெய்வம். மனந்திரும்பும் அரசுரைவாய் மலர்ந்தபெருந் தெய்வம் மறுவுடையு மில்லாமல் வறுமை கொண்ட தெய்வம். தினந்தினமும் நடந்துபதம் தேய்ந்துளைந்த தெய்வம் சிரஞ்சாய்க்க இடமின்றிச் சிரமமுற்ற தெய்வம். இனஞ்சனமாய்ப் பாவிகளை ஏற்ற பெருந் தெய்வம் ஈனருடன் விருந்துண்ட எளியவரின் தெய்வம். சினஞ்சிறிய வருக்குமிகச் சேவை செய்த தெய்வம் சீடரடி கழுவியவர் செருக்கழித்த தெய்வம்.