பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

அனுபல்லவி

மேசையா மீன் மிளிர ஞாலம்
மேலை வானுனை மீச்சொல்காலும் (ஏ)

சரணம்


காசினி தீ குளிருங் காலம்
கன்னியேழை மரியாள் மூலம்
காலி சோயற் சாவடித் தோழம்
கண்டதில்லை இடம் விசாலம்.

தூசு பழங் கந்தை மேலும்
துய்ய பஞ்சணை புல்லே கீழும்
தொழுவர் முனமுன் தூதராலும்
தோற்றமறிந்தார் துங்கர் போலும். (ஏ)

தொழுவர் = இடையர்

7
எட்டாம் நாள் விருத்தசேதனம்.
சிமியோன் துதி.
'அநாதுடனுகானு' என்ற மெட்டு.

பல்லவி
என்னே! எனது பாக்யம் இம்மையே
அனுபல்லவி

முன்னோன் மகன்வரு முன்னிறப்ப தில்லென
முன்னே யுரைகாணவின் றேசுவை (எ)

சரணம்


கோனே! உம்மடியேனை நற்சமாதானமாய் விடுகின்றீர்
ஏனோருக்கொளியாய் இனத்தில் மகிமையாய்
எல்லாருக்குமுன் ஆன ரட்சண்யமுற் (எ)

8
தேவதூதன் யோசேப்புக்குச் சொல்வது.
'ரகுநாயகா' என்ற மெட்டு
பல்லவி
எடுசேயனையோ சேப் உடனே ஏரோது கொல்ல வகை தேடுவான்