பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


பாராத பேர் முடவ ரோடுபிணி யாளர்பலர்
சீராக நீசெய்தவ மாபுதுமை தாவிதுகு
மாராய ஓசனவெ னோசையிடு பாலரொடுஞ் சினமாகி

நேராத பாரகர்பு ரோகிதரி தேனெனவும்
நீரோது வேதமென ஒர்வசன மோதிவிரி
பாரான வாழ்விலொரு மாவயவ ரானபரம்பொருளோனே

 

23
தலைவி தோழிக்குச் சொல்லியது.
'வெள்ளிப்பிடி யறுவாள்' என்ற மெட்டு.
ஆரபி ஏகம்.

மானிடருந் திரளாக மாணவக ரொடே கூடக்
கானமிளை யவர்பாடக் கல்விமானுங் காணாவாறே
பானுவொரு புயன்மேலே பாய்ந்து வரல் போலே சாலேம்
மாநகரி லொருபவனி மன்னன்வாக் கண்டேன் நானே.

வாகைபெற வயவீரர் வாளெனவே ஓலை வீசி
ஓகையுடன் இளையோரும் ஓசன்னா ஓசன்னா வென
சாகைதழை பலபேர்கள் சாலையிடச் சாலேம் நகர்
மாகழுதை மிசையேறி மன்னன் வரக்கண்டேன் நானே.

காவலரார் இவரென்று கண்டவரே கேட்டயா
தேவதிரு வரரான தேசிகன் கிறிஸ்தே சென்றார்
தாவிதுகு மரனாகத் தங்கமேனி பொங்கவொளி
மாவலமை யொடுவீதி மன்னன்வரக் கண்டேன் நானே.

ஓலைகரம் பிடித்துயர்த்தி ஓசன்னா ஓசன்னாவென்று
பாலகரும் பலமாகப் பண்ணகரம் பாடிவரச்
சேலைகிளை பாவு வழிச் சென்றனரே தேவாலயம்
மாலெனக்குள் வளர்ந்தேற மன்னன்வரக் கண்டேன் நானே

காசுபுறா வாணிகரைக் கண்டுசினங் கொண்டேயவர்.
ஆசனத்தைக் கவிழ்த்தோடி ஆச்சரியமாயடித்தார்
ஓசன்னா வோசன்னா வென்றே ஒயாச் சிறுவர் பாட
மாசனத்தின் நடுவாக மன்னன் வாக்கண்டேன் நானே.