பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சரணப் பணிவிடைகள் புரியப் பரமனோடு
சதுரக் கலிலேயாவை நீங்கின-பல
மகரக்குழையமாதர் ஏங்கினர் -கதிர்
சாயும்வேளை யோசேப்பு நம்பனின்
காய மோது பிலாத்துவுந்தரத்
தயிலத்தினை மிகுத்துப் பெய்தனன் - ஒரு
சயிலத்திலே யடக்கஞ் செய்தனன்

திருடிப் பழகிநாமும் சிலுவைப்பட நியாயம்
சிரமப்படவே யிந்தத் தூயவர் - என்ன
கருமப் பதகஞ் செய்யலாயினர்- என்று
தேவனே யுமதரசி லென்னையும்
காவுமே யெனவலது கள்ளனும்
திருவிற் பெரிய பரதீசிலே-இன்று
மருவப் பெறுவை யென்றார் ஈசனும்

 

32
வலதுபாரிசத்துக்கள்ளன் வேண்டுதல்
‘ஸ்ரீரகுவர' என்ற மெட்டு.

(வேண்டுதல்)
பல்லவி


ஆண்டவா உன தடியேனையும்
அரசுறும் வேளையில் ஆளாய் சீராளா

(நெஞ்சொடு கூறல்)
அனுபல்லவி


நாமேதம் செய்தம் நன்றாகுந் தண்டனை
கோமானிவரிற் கூறவோர் கோதுமேது (ஆ)

(பரதீசு பெற்றபின் பரவல்)
சரணம்


தேவகுமாரா திரு அவதாரா
பாவியெனக்கும் பரதீசுபகாரா (ஆ)