பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

 

35
சிலுவைத் தியானம்.
'கத்தனவாரிகி' என்ற மெட்டு.
பல்லவி

எத்தனை வேதனை இத்தரை ஈனக் குருசின் மீது
இத்தகை யாகவும் ஏது குற்றம் செய்தாய்

அனுபல்லவி


அத்தனே ஏன் என்னைக்கை விட்டீரென்ற ரற்றியொரு
சுத்தவ நாதையாய்த் துன்புற எது காரணம் (எ)

சரணம்


மட்டில்லா மகிமையின்பம் விட்டு மானிலத்தில் வந்து
எட்டுணையும் இதமின்றி ஏளனமாகிச்
சுட்டெரிக்கவு முதவாத சட்டகம் நானென்று பற்றிக்
கெட்டதோர் நாயினுங் கேடுறுங் கேவலம் எனைமீட்க (எ)

 

36
'புள்ளிக்கலாப மயிற் பாகன்' என்ற மெட்டு.

வெள்ளிக்கிழமை வெயில் நேரம்-மனம்
வேகுங் கல்வாரிமலை யோரம் - மன
வேதனை மிகக்கடந்த
வேதனை மரத்தறைந்த வீரர்
பழிகாரர்

முள்ளின் மகுடம் முடிமேலே- ஒரு
மூங்கிற்கழை காச் செங்கோலே - அந்த
மூவுலக வேந்த னொரு
பாவமிகு மாந்தனெனச் சிலுவைப்
பெறுங் கொலுவை

ஆணி கைகாலிணைகள் ஏறிப் பல
அருவிப்பட இரத்தம் பீறி-மிக
அவதிப்படத் துறந்த
அகதித் திறத் திறந்த தேனே
பழி நானே