பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34

வாரிலொரு வடமேபின்னி—உடன்
வளைத்து வருத்த ரத்தங்கன்னிப்-புலி
                வருணம் பெற உடம்பு
                விரணம் படுந் தழும்பு தடிக்கும்
                                ஒவ்வோர் நொடிக்கும்

பச்சைப்புண்ணிலே வடிவேலே-உறப்
பதித்த பெருங்கொடுமை போலே - குட்டுப்
பட்டதலை குத்துமொரு
கட்டு முள்ளை யிட்டதென சிரமோ
அது மரமோ

சுந்தர முகமெல்லாம் எச்சம்—பவ
சோதனைக்காரன் வந்து மெச்சும் - இரு
சோர ரொடு பாத சாரி
வீரர் பலர் கூறும்பரி காசம்
அலை கேசம்

தாங்கமுடியாப் பசி தாகம்-பச்சைத்
தண்ணீரு மில்லை யவர் பாகம் - திருத்
தங்கமேனி வற்றலெனப்
பங்கமாக நிற்றலென பாவம்
பரி தாபம்

பஞ்ச பாதக பரிகாரம் - அவர்
படிவத்தி லைந்து காயம் பாரும்-திருப்
பாதத்தே விழுந்தழுது
பாவத்தை முனங்கழுவ வாரும்
கண்ணீர் வாரும்

 

37
'மஞ்சுநிகர் குந்தளமின்னே' என்ற மெட்டு.

நெஞ்சமே நினைந்துபார் முன்னே - நிருதவீரர்
குருசிலார
நிந்தையா யறைந்த மாமன்னே - அந்த
நீதனும்பெரு .வேதனையுற
மோது மென்பவ மேதுசெய்குவேன்
நின்று முழங்காலில் நீடியே-அழுதலறித்
தொழுதிடுவென்
நேசமா மகாரை நாடியே