பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

 

43
மெய்த்தெய்வம்.
'அருட்சோதித் தெய்வமென்னை' என்ற மெட்டு.
பந்துவராளி - நபகம்.

நாதாந்தத் தெய்வமென்னை நாடிவந்த தெய்வம்
நம்பனி டத்துயிரொளியும் தண்ணிய மெய்த்தெய்வம்

ஏதேன்றன் இறைவன்பணி எதிருரைத்த தெய்வம்
ஈசனடியார்களுமுன் இசைத்த பெருந் தெய்வம்

வேதாந்த சூரியனாய் விளங்கிய மெய்த் தெய்வம்
வியனிலத்தில் மாமிசமாய் விளைந்த மகத் தெய்வம்

போதாந்தம் படவருக்கே புகன்றளித்த தெய்வம்
பூமியெங்குந் திரிந்துநலம் புரிந்த பெருந்தெய்வம்.

மனந்திரும்பும் அரசுரைவாய் மலர்ந்தபெருந் தெய்வம்
மறுவுடையு மில்லாமல் வறுமை கொண்ட தெய்வம்

தினந்தினமும் நடந்துபதம் தேய்ந்துளைந்த தெய்வம்
சிரஞ்சாய்க்க இடமின்றிச் சிரமமுற்ற தெய்வம்

இனஞ்சனமாய்ப் பாவிகளை ஏற்ற பெருந் தெய்வம்
ஈனருடன் விருந்துண்ட எளியவரின் தெய்வம்

சினஞ்சிறிய வருக்குமிகச் சேவை செய்த தெய்வம்
சீடரடி கழுவியவர் செருக்கழித்த தெய்வம்.

பட்டினியாய்ப் பசி தாகம் பரந்தெழுந்த தெய்வம்
பலமான வாரடியும் பட்டபெருந் தெய்வம்

குட்டி மிகு பாதகரும் குறைவுறுத்த தெய்வம்
கோரமிகுஞ் சிலுவையிலே கொலையுண்ட தெய்வம்

மட்டில் பெரும் பகைவருக்கும் மன்னிப்புரை தெய்வம்
மன்னுயிரைத் தன்னுயிர்போல் மதித்த பெருந் தெய்வம்

திட்டியிடச் சோரனுமுன் சிறுமைசெய்த தெய்வம்
திருடனுக்கும் பெரியபரதீசளித்த தெய்வம்