பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

iii

 

சில தனிப்பாட்டுக் (Solo) களும், சொதைவண்ணங் (Band tune) களுமுள்ளவே! கீழ்நாட்டிசையிலும் சபைக்கேற்ற தாழ்ந்த மெட்டுகளைத் தெரிந்துகொள்ளவும் அமைத்துக்கொள்ளவும் இயலுமே! எத்துணையோ ஞானக் கீர்த்தனைகள் ஞானப் பாட்டுகளைப் போலவே பெரிய சபையாராலும் இசைவோடு பாடப்படுவதில்லையோ? மேலும் ஞானப்பாட்டுகளை விடுதிப் பள்ளிக்கூடங் (Boarding School)களிலும், கோயில்களிலும் தக்க அறிஞரை வைத்துப் பயிற்றுவிக்கின்றனர். கீர்த்தனைகளையோ கிளப்பாருமில்லை, கேட்பாருமில்லை. இதையெல்லாமறிந்திருந்தும் தமிழிசையைக் கோயிலதிகாரிகள் இன்னும் கோயிற்குப் புறம்பாக்கி வைத்திருப்பது பலர்க்கு ஆராதனையின்பங் குறைதற் கேதுவாகின்றது. தமிழறியாது அங்கிலமே பயின்றவர்க்கு மேனாட்டிசை இன்பந்தரும். ஆனால் அங்கில மறியினும் அறியாவிடினும் தமிழ் பயின்றவர்க்கோ அது சற்றும் இன்பந்தருவதின்று. இதற்கு இந்துக்களே சிறந்த எடுத்துக்காட்டாவர்.

தமிழிசைபற்றிய ஞானக்கீர்த்தனைகள் ஏராளமாயிருப்பினும் அவற்றுட் பெரும்பாலன எளிய கருநாடக மெட்டுகளாதலின், அவை உயர்ந்த இசையை விரும்பும் தமிழ்க் கிறிஸ்தவர்கட்கு எத்துணையும் போதியவாகா. இக்குறையை நிறைத்தற்கு இதுபோது எத்துணையோ கீர்த்தனப் புத்தகங்களும் வெளி வந்துள்ளன. ஆயினும் பலரும் பாடுவது தேவனுக்கு மகிமையென்று கருதிக் கிறிஸ்துவின் ஜீவியத்தைக் கோவைபடப்பாடி இக்கீர்த்தனங்களை வெளியிடத் துணிந்தேன். இவற்றுட்பலர்க்கும் பயன்படுமாறு தேவாரம், திருப்புகழ், தியாகராஜக் கீர்த்தனை காவடிச்சிந்து முதலிய பலதர மெட்டுகளும் அடங்கியுள்ளன.

இப்புத்தகத்தின் இறுதியிலுள்ள சில சங்கீதங்கள் சில்லாண்டுகட்கு முன், தின்னனூரிற் சிறிதுபோது திகழ்ந்த பாரதகிறிஸ்தவவர்த்தமானிப்பத்திரிகை விளம்பரத்திற்கேற்பப் பண்ணமைக்கப்பெற்றவை. ஏனையவற்றுட் சில சென்னைத் தண்டையார் பேட்டை U. F. C.M. சபையார் வேண்டுகோட்