பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

‘வரத்தமரே மறுத்தபின்னர் வழிமறுகே “கண்டாரெல்லாம்”
பொருத்தமுடன் வந்துசேரப் பொதுவழைப்பாம் சிலுவையின் கீழ்
அரத்தமதில் தோய்ந்த வெள்ளை அங்கியரே வருவருகர்
அருத்திமிகும் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கல்யாணம்.

காற்றுடனே மதிமுதலாம் கடும்பகைக்கு வருந்தா வாறே
தேற்றரவார் தேற்றிவரத் திருமுகமோ சுவிசேடமாய்
ஆற்றியிருந்தே திண்கற்பு மழிவரிய திருச்சபைக்கும்
ஆற்றன் மிகும் ஆட்டுக்குட்டியானவர்க்கும் கல்யாணம்.

எண்ணையொடு பந்தங்கொண்டே ஏற்றபொழு தெதிர்கொள்ளாத
கன்னிகையோர் பாங்கியாகக் காலமெல்லாம் ஏவல் செய்யக்
கன்னன் மொழி மணவாட்டி கண்ணியமாய் வீற்றிருக்க
அண்ணலராம் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கல்யாணம்.

 

52
பன்னிரு சீடர்.
"வந்தேமாதர மென்போம்' என்ற மெட்டு.

பேதுரு என்ற சீமோன் - அவன்
சோதரன் அந்திரேயா

செபதேயு மகன் யாக்கோ(பு)-அவன்
சீரிய சோதரன் யோவான்

பிலிப்பு பர்த்தொலோ மேயு-திருத்
தோமா ஆய மத்தேயு

அல்பேயு மகன் யாக்கோ{பு) - ஒரு
ததேயு வென்ற லெபேயு

கானானி யனாம் சீமோன் - முகங்
காட்டிக் கொடுத்த யூதாஸ்

யூதாஸ் காரி யோத்தின்- பதில்
ஆனான் மத்தியாவே