பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

56
'ஐயா பழனிமலை வேலா' என்ற மெட்டு.
சகானா ஏகம்.


வங்காரமானவேத வசனம் - அதன்
வாசகம் அறுசுவை யசனம்
சிங்கார பரமதரிசனம்- அதைச்
சிந்திப்பவருக்கில்லை விசனம்

தேவாமிர்தமே தெளிதேனே - அதன்
திவ்யமதுரம் நிகர் தானே
ஜீவாதரமெனுமோர் வானே அதிற்
சிறிதுமோர் குறைவில்லை மானே (வ)

வாலிபன் வழிகளிற்சேமம் அதை
வாசிக்க பகல் நடுச்சாமம்
காலோர வளமர நேமம்- உன்றன்
கருமங்கள் நிறைவுறுந்தாமும் (வ)

பேதைக்குப் பரம விவேகம் - பல
பிணிகளும் பெயர்ந்துடன் போகும்
பாதைக்குப் பகலொளியாகும்- இரு
பதமொரு தீபமே தெய்வீகம்

அசனம் = உணவு.

57
புதிய ஏற்பாட்டுப் பத்துக் கற்பனைகள்.
'மாங்காய்ப் பாலுண்டு' என்ற மெட்டு.

1கர்த்தரே தெய்வமாய்க் கருதித் தொழுவார்க்கே
வித்தையு மேதுக்கடி (மடந்தாய்!)
(கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.)

2ஆவியில் தேவனை ஆராதிப்பவர்க்கே
ஆலய மேதுக்கடி (மடந்தாய்!)
(ஆவியில் தொழுகின்றவர்க்கு ஆண்டவர் எங்குமிருக்கிறார்)