பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

65
ஒரே மிஷன் : ஒரே திருச்சபை.
'ஜன கண மன அதி' என்ற மெட்டு.

1உலகமுழுவது மொரே திருச்சபையே
உத்தம கிறிஸ்தவ ஞானி
கத்தோலிக் ஆணை கடந்தஜெர் மானி
லுத்தரன் மா பிரித்தானி
இந்திய தேசியம் இதரவி லாசம்
பெந்தே கோஸ்து விஸ்வாசம்
பலபல மிஷன்களுமுண்டே
பக்த ரெல்லாம் சபை யொன்றே
பகரும் கிறிஸ்தவ மென்றே
உலகமுழுவது மொரே திருச்சபையே
உத்தம கிறிஸ்தவ ஞானி
ஒரு மாமறைமே னெறியே
ஒரு பொதுத்திருச் சபையே

2உலகமுழுவது மொரே திருச்சபையே
உடம் பதன் தலை கிறிஸ்தேசு
ஒன்றாத சபைகளாய் ஒருவின அங்கம்
உறுவது மோர் தலை யெங்ஙன்
ஊ ழியம் பவுல் அப்பொல்லோ ஒன்றே
ஒவ்வோர் வினை வேறுண்டே
விளையச் செய்பவர் தேவன்
வினையைச் செய்பவன் யாவன்
விதியிற் செல்வன ஜீவன்
உலக முழுவதுமொரே திருச்சபையே
ஒற்றுமை போதக வன்மை
ஒருமா மறைமே னெறியே
ஒருபொதுத் திருச்சபையே