பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

3நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப் பஞ்சேன்
தேவரீர் கூட இருப்பீர் தேற்றுவதுங் கோல் (ஏ)
4பகைவர்முன் பக்திவைத்தே பாத்திரம் வழியவென்
சிகையபிஷேகம் செய்கிறீர் சிறந்த நெய்யால் (ஏ)
5என்னுடைய நாளெல்லாம் எனக்கு நன்மை கிருபை
நின்மலன் வீட்டில் நீடியே நிலைத்திருப்பேன் (ஏ)

68
42ம் சங்கீதம்.
'வனஜாட்சி' என்ற மெட்டு
சிந்துபைரவி ஏகம்

பல்லவி
கலங்காதே - கவலையுடனே மனம் கலங்காதே

அனுபல்லவி

கர்த்தர் சந்நிதியின்
ரட்சை யெண்ணித் துதி

சரணம்

1தாவியே மான்களுந் தண்ணீர் அவாவ
தகை மனங் கடவுள்மேல் தனியுயிரேவ
மேவியே தேவகம் மிண்டர் வினாவ
மிகவுமென் னிருகணும் பகலிரா நோவ

2பண்டிகை ஆலயம் பலருடன் சென்றேன்
பணிவொடு துதிசெய்தேன் பழைய நாளன்றே
இன்றதை யுள்ளவும் இளகியே நின்றேன்
இறையுமை யெண்ணுவேன் எருமோனின் குன்றே

3கரை மதகலை யென்மேல் கரை புரண்டோடும்.
கட்டளை யிடுமிறை கருணை யெற்பாடும்
இரவிலவரைப் புகழ்ந் தென்வாயும் பாடும்
எனது தேவனை யென்றன் விண்ணப்பந் தேடும்

4கன்மலைத் தேவனைக் கழறுவேன் நானே
கடியவர் தாக்கவும் கவன்றலைந் தேனே
உன்னுடைத் தேவனெங்கே யென்பதானே
உருவக்குத்திய புண்ணே உறுவதென்பேனே.