பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

69
95ம் சங்கீதம்.

பைரவி- நபகம்

பல்லவி

ரக்ஷணியக்கன்மலை யோரம் - கர்த்தனை
ரஞ்சகக் கெம்பீரம் பாடவாரும்

அனுபல்லவி

துதித்த லுடனவர் முன்னே.
கதித்த விசையுடனின்னே

சரணம்

1கர்த்தரே தேவன் எல்லாத் தேவர்க்கும் ராஜன்
இத்தரையாழம் அவர்கையிலே வாசம்
மெத்தவுயர்மலை கத்துங்கடற் கீசன்
வெட்டாந்தரையும் அவர் கைவினை பேசும்

நம்மையுண்டாக்கினவர் முன்
நாம் முழங்காற்படி யிடுவோம்
செம்மையின் மேய்ச்சலின் ஜனமே
சீர்பெறும் ஆடுகளுடன் நாம்.


2இன்றிவர் சத்தம் இசைந்து கேட்பீராகில்
அன்று வனாந்தரம் சோதனை நாட்போல
உந்தன் மனங் கடினப்படுத்தாதேயும்
அங்கே உம் தந்தையர் என்னையே சோதித்தார்

நாற்பது வருஷம் வெறுத்து
நன்னெறி வழுவின ரென்றே
ஏற்படுமெனதிளைப்பாறல்
இலையவர்க்கென்றது முண்டு

.

கவனிப்பு:- ஏசுவின் இளமையைப்பற்றிய 9ம் கீர்த்தனைச் சரணத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இதைப் படிக்கவும்.

தந்தைதா யிவருறத் தவமெனோ செய்தார்!
என்றவரேனோர் ஏகமாய் மகிழ

அந்தமி லாதவன் அருளொடு ஞானமே
மன்றயவாமதி மாண வளர்ந்தனர் (இ)