பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

6உறைந்த மழையே மூடுபனீ அவர் உரைத்தபடி செய்யும்
விரைந்த காற்றே மலைமேடுகளே விளைந்த கனிமரம் கேதுருவே

7காட்டிலுள்ள விலங்கே சகல நாட்டுவிலங்குகளே
ஏற்றமில்லா ஊரும் பிராணி இறக்கையுள்ள பறவைகளே

8'மாநிலத்திலுள்ள சர்வமாந்தர் வேந்தர்களே
மானமிக்க பிரபுக்களே மாட்சி நீதிபதிகளுமே

9வாலிபரே கன்னிகளே வயதுமுதிர்ந்தவரே
பாலர்களே கர்த்தரையே பரவுங்கள் அல்லேலூயா

10கர்த்தரின் உயர்நாமத்தைத் துதிக்கக் கடவீர்
இத்தரைக்கும் வானத்திற்கும் ஏற்றமுள்ள தவர்மகிமை

11தொண்டர் இஸ்ரவேலரான தொடர்ந்த ஜனங்களெல்லாம்
கொண்டாட வுயர்த்தினாரோர் கொம்பையே

அல்லேலூயா
 

75
மங்களம்
'நீநாமநபழலது' என்ற மெட்டு.
சௌராஷ்டிரம்-ஆதி

பல்லவி
தேவாதி தேவ குமர திவ்ய மறி மங்களம்
சரணம்
மூவாத்ரியேக முற்ற முதலீறு மங்களமுற


 

வாழிக்கலித்துறை

வானமது வளம்பொழிய வரம்புயர்ந்து ஞாலம் வாழி
தான மொடு தருமங்கள் தவவிரதந் தழைத்து வாழி
கானமிகு தமிழுடனற் கலையறிவு குலவி வாழி
மானபரன் கிறிஸ்தேசு மதநீடு வாழி வாழி


 

பாரதி பிரஸ், மன்னார்குடி.