பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள்

99


முன் அனுபவம் இல்லை; அதனால்தான் பழக வாய்ப்பு இல்லை” "உன்னை நம்பி எப்படி வண்டியைத் தருவது?” "என்னை நம்பி லைசென்சு தந்திருக்கிறார்கள். நான் சரியாக விடுகிறேன் என்பதால் அல்ல; விடுவேன் என்ற நம்பிக்கைதான்" அவன் விடை விசித்திரமாக இருந்தது.

"எப்படி உன் சமையல்காரி?”

"அப்படித்தான்; நன்றாக வேலை செய்கிறாள்"

"கை சுத்தமாக இருக்காதே!"

"ஏதாவது சுருட்டிக் கொண்டு இருப்பாளே” தெரிந்து வைத்துப் பக்கத்துவிட்டு நண்பி வினவுகிறாள். "பெரிசு எதுவும் எடுக்க மாட்டாள்; சில்லறை காசுகள் மறைந்துவிடும்; பரவாயில்லை. மோசம் இல்லை.” "திருடுகிறாள்; எப்படி அவளை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?" வியப்பு வினா. "நாங்கள் குறைவாகச் சம்பளம் தருகிறோம். மனம் வந்து கொடுப்பது இல்லை. அவள் நிறைவு செய்து கொள்கிறாள். அவ்வளவுதான்" "எப்படி உங்கள் கார் டிரைவர்?" நகைப்பு வினா.

"ஆரம்பத்தில் இரண்டு மோதல்கள்; கொஞ்சம் செலவு ஆகியது. டிங்கரிங்க் செய்தேன். சில சமயம் தவறுகள் நடந்து விடுகின்றன. இப்பொழுது பரவாயில்லை." "எப்படி அவனை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?" "அப்படித்தான்; ஆரம்பம்; பிறகு சரியாகப் போய் விடும்" என்று அமைதியாகப் பதில் தருகிறார்.