பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஈடு ஆகாது அடைந்த தாள்கள் அவனைப் பிரித்து விட்டன. உலகம் அவனுக்கு அப்பாற்பட்டது ஆகிறது. அவனும் அந்த நடிகையின் அந்தஸ்தைப் பெறுகிறான். பேருந்துகள் ஏறி அமர அவன் மற்றவர்கள் கைத்தாங்கல்களை எதிர்பார்த்தான். 'பெரியவரே பார்த்து' என்று சிறுவர்கள் அக்கரை காட்டின்ார்கள். அவன் வாழக்கை முடமாகவில்லை; கால் மட்டும் தான் முடமாகியது. அன்று அந்த ஒசி காரில் ஏறி இருக்கலாம். ஏசி’யும் பொறுத்தப்பட்டிருந்தது. அவன் சுக வாழ்க்கை எதிர்ப்பு அவனைத் தண்டித்து விட்டது. இப்பொழுது எண்ணிப் பார்க்கிறான். 'வசதிக்காரன் இந்தச் சமுதாயத்தின் படைப்பு: இதில் அவன் கை கொடுத்து உன்னைத் துக்கி விடுகிறான். நீ ஏன் மறுக் கிறாய்? நீ அவனை அவன் தரும் வசதியை ஏற்க மறுத்தாய்; அதன் விளைவு இது, தண்டனை' என்று எண்ணத் தொடங்கினான். ஊனம் உண்டாக்கிய அதே மருத்துவர் இவனைச் சந்திக்கிறார். ஏழு ஆண்டுகள் இடைவெளி. அன்று இவன் எதிர்க்கவில்லை; அவர் செய்த தவறை வாய்விட்டுக் கூட எடுத்துக் கூறவில்லை. மருத்துவன் பால் மீளாத மதிப்பு அவனை விட்டு அகலவில்லை. தீராத பாசம் அவர்பால் காட்டினான். அவர் கெடுக்க வேண்டும் என்று தெரிந்து ஒடுக்கவில்லை. பிழை அதைப் பொறுப்பது பெரியவர்கள் கடமை என்ற உணர்வு தலைத்து ஓங்கியது. 'நடிகை வழக்குத் தொடுத்தார்களே என்ன ஆயிற்று?” அவரைச் சந்திக்கும்போது தொடுத்த வினா அது.