பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஈடு ஆகாது அவர் ஏன் அந்தக் காசோலையை அங்கு விட்டுச் சென்றார்? அது காலாவதி ஆகி இவன் நிழற்படத் தொகுப்பில் குளிர் பெற்று நிற்கிறது. அது அவனுக்கு ஒரு நினைவுப் பரிசாக அமைகிறது. மாறாத மதிப்பு உயர்கிறது; அவரைத் தொடர்ந்து மதிக்கிறான். அதற்கு அது ஒரு அன்பளிப்பு என்று கோத்து வைக்கிறான். இழப்புக்கு இது ஈடாகாது; அவன் இன்றும் முட மாகத் தான் நடக்கிறான். 17 மாற்றம் அவனுக்கு ஒரு ஆசை அவளை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குப் போக வேண்டும் என்று. இளங்காதலர்கள் அங்காங்கே இணைவதற்கு வழி யில்லாமல் பிணைந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த் திருக்கிறான். அவர்கள் என்னதான் பேசுவார்கள் பேசுகிறார்கள்; பேசுவதற்கு என்ன இருக்கிறது? யாரையாவது அவர்கள் யோக்கியர்கள் என்று கூற இடம் தரவில்லை. ஒருசிலர் புதுசுகள்; கிசுகிசுக்கள்; வீட்டை விட்டு வெளியே சென்றால்தான் சுகம். ஸ்பரிச உணர்வு; அவரவர்கள் வேட்கையை விபரீதமாகச் சொல்ல முடியாத சொற்கள் கரை புரண்டு அலை மோது கின்றன. செயல் மறந்து; இவர்தன் இளமைக் காலத்தை எண்ணிப் பார்க்கிறார்.