பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 109 'ஆனால் என்ன ஆனால், போனால் போவுது சொல்லுங்க” 'இரண்டாந்தாரம்' 'அதனால் என்ன அனுபவப்பட்டவன். நல்லா வச் சிருப்பான்' 'முதல் தாரம் அவள் போனாள் சோரம்; அதனால் பிறந்தது வீரம். விவாகரத்து; அவள் இவனை வீட்டுப் போயிட்டாள்' 'லட்சாதிபதி என்கிறே! அவளுக்கு வேறு லட்சியம் இருந்திருக்கும்; காதல் லட்சியம்; பழக்க தோஷம்; பழகியவனையே தேடிக் கொண்டாள். இவனோடு ஒட்ட முடியவில்லை. அதனால் வெட்டித் தள்ளி விட்டானா?” 'கோர்ட்டிலே விவகாரம் நடந்தது; 'போடா போ' என்று அவள் போயிட்டாள்' 'சரி விட்டது சனியன்'. 'அவளுக்கு ஒரு பெண் குழந்தை' 'அடையாளச் சின்னம்' "அதுக்கும் சேர்த்து செட்டில்மென்டு செய்து அனுப்பி விட்டான். வில்லங்கம் எதுவும் இல்லாத சொத்து; அவன் பரவாயில்லை” - 'இன்னொருவன்; படிச்சிருக்கான்; പങ്ങഥഞങ്ങി. நிரந்தமான தொழில்; பையனும் சுமாரா இருக்கான். 'பின் என்ன?’’ 'முப்பது சவரன் கேக்கிறான்; முப்பத்ாயிரம் எண் ணிக் கொடுக்கச் சொல்றான்; சத்திரத்திலே கலியாணம்; சாஸ்திர முறைப்படி எல்லாம் நடக்கணும்; சொத்து எதிர் பார்க்கிறான்'