பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நிம்மதி அவள் சாய்ஸ் 'சரி இதுவும் நல்லாத்தான் இருக்கு கறைபடியாத சரக்கு; சுத்தமான நெய் மணக்கும்; எந்தக் குறையும் சொல்றதுக்கு இல்லை' 'அது சரி இரண்டிலே எது நல்லது. அதுதான் யோசிக்கிறேன்' 'உன் பெண் என்ன சொல்றா?' 'நீ என்னம்மா சொல்றே?” “உங்க இஷ்டம் எந்தக் கிணற்றிலே தள்ளினாலும் விழத் தயார்' “என்னம்மா அப்படிச் சொல்றே" 'நீந்தத் தெரியும்; கரை ஏறுவேன்; யாரா இருந் தாலும் எல்லாம் ஒண்னுதான்; எனக்கு வித்தியாசம் தெரியலை' அவளுக்குக் கலியானத்தில் ஆர்வம் இருந்தது. அதனால் அவள் பதில் இப்படி அமைந்தது. 'பெண்ணுக்கு எந்த அபிப்பிராயம் இல்லே; எது எப்படி நடக்குமோ அது அப்படித்தான் நடக்கும்; நம்ம கையிலே ஒண்ணுமில்லை' என்று சொல்லுகிறாள். இந்த பதிலை எங்கோ வெளிப்படுத்தியது போல் இருந்தது. தானே இதற்கு முன் கூறியது நினைவுக்கு வநதது. இவர் போன் இதைப் பதிவு செய்கிறது. தீர்ப்புக் கூறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்கிறார். தொலைக்காட்சி நாடகம் நினைவுதான் வருகிறது. துருதுருப்பான பெண்; அவளை அவன் மணக்க விரும்புகிறான். வசதிகள அழைக்கின்றன. அதை மறுக் கிறாள்.