பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 111 மாமன் மகன் அவனையே நேசிக்கிறாள். அவன் வசதி அற்றவன். சூழ்ச்சிகள் இவர்களைப் பிரிக்கிறது. நேசித்த உறவினன் அவளை மணக்க முடியவில்லை. இருவரும் இணைய முடியவில்லை. மறுபடியும் அந்த முதலாளி இவளை இழுக்க முயல்கிறான். பழுக்க அவனைப் பேசிவிட்டு ராஜினாமா செய்கிறாள். அடுத்து எப்படி முடியும்? தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான். “என் பெண் முடிவு செய்து விட்டாள்" என்று சந்தோஷமாக நண்பர் வந்து சந்திக்கிறார். 'லட்சியப் பெண்; முதல் தாரமாகத்தான் இருக்க விரும்புவாள். நிச்சயம் மற்றவனை நிராகரித்திருப்பாள்" என்று இவர் கூறுகிறார். 'இல்லை! அவள் செல்வ மகன் கோடீஸ்வரனை யே தேர்வு செய்து விட்டாள்.' 'காரணம்?" 'இளைஞன் என்னை விரும்பவில்லை. என்னிடம் சொத்து, வரதட்சணை இதைத்தான் விரும்புகிறான்; இவர் செல்வந்தர் என்னை விரும்புகிறார்' இது அவள் சொன்ன பதில். இரண்டுமே ஒரளவு தன்னை விற்றுக் கொள்வது தான். யார் அதிக விலை தருகிறார்கள்? வசதிமிக்கவனுக்கு வாழ்க்கைப்படுவதே புத்திசாலித்தனம் என்று அவள் தெரிவிக்கிறாள். எழுத்தாளர் இவருக்கு அதிர்ச்சி தருகிறது. எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. மண வாழ்க்கை என்பது 'அது' என்று யாரோ அறிஞர் கூறியது நினைவுக்கு வருகிறது.