பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நிம்மதி அவள் சாய்ஸ் அதை வாய்விட்டுக் கூற அவர் நா இடம் தர வில்லை. அதை இவள் நாகரிகமாகக் கூறியிருக்கிறாள் என்பதை உணர முடிந்தது. 'நிம்மதி அவள் சாய்ஸ்' அதற்கு அவள் தேடிக் கொண்டது பெருநிதி என அறிய முடிந்தது. 19 சரப்பாடு என்ன செய்தது இலையில் வைத்தது அது அப்படியே இருக் கிறது; அவன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறான். 'உன் கைச் சோறு இனித் தேவை இல்லை” 'கரண்டியில்தான் போட்டிருக்கிறேன்; சாப்பிடுங்க." 'உன் கையால் சமைத்தது தேவை இல்லை.” "சமையல்காரிதான் சமைத்து விட்டுச் சென்றிருக் கிறாள்' ‘'வேண்டாம் என்றால் வேண்டாம்; அவ்வளவு தான்.' அன்று டப்பாவில் அடைபடும் எலுமிச்சம் சோறு தப்பித்துக் கொண்டது; சோற்றுக்கு விடுதலை கிடைத்தது. அவன் அவளிடம் எதுக்கு இந்த வம்பை வளர்த்தான்?