பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சாப்பாடு என்ன செய்தது பொய் சொல்லிப் பழகவில்லை; கதைகள் படித்து இருந்தால் அவனால் பொய் சொல்லி இருக்க முடியும். தொடர்கதை தொடர்ந்து பார்த்திருந்தால் அவனால் ஒன்றனைக் கற்பிக்க முடியும். மூன்று பிள்ளைகள் பெற்றவர். திடீர் என்று அவள் கணவன் கட்டிட வேலை செய்யுமிடத்திலிருந்து தவறிவிடு கிறார். குடை சாய்கிறது. என்ன செய்கிறாள்? அந்த மூன்று பிள்ளைகளும் யாரோ தத்து எடுக்கிறார்கள். மூன்று பேரும் மகா உன்னதநிலை அடைகிறார்கள். ஒருவன் பிரபல நடிகன்; மற்றொருத்தி பாடகி, இன்னொருத்தி புகழ்மிக்க மருத்துவர்; ஆகா! எவ்வளவு பெரிய சாதனை. அவன் அகால மரணம்; அதன் விளைவு. பல உச்சிநிலைகள். இதை நம்பித்தான் ஆகவேண்டும். அவர்கள் அழகாகப் பொய் சொல்கிறார்கள். பிரமாதமாக அந்தக் கதை ஆர் வத்தைத் துண்டுகிறது. பல ரீல்கள் ஒடுகின்றன. ரீல்கள் விடுவதில் அவர்கள் நிபுணர்கள். அந்தக் கதையை இவன் பார்த்திருந்தால் அழகான பொய் சொல்லி இருக்கலாம். 'எனக்குப் பொய் சொல்வது பிடிக்காது' என்று பலமுறை சொல்லி இருக்கிறாள். அது அவன் நினைவுக்கு வருகிறது. உண்மையை எப்படிச் சொல்வது. சத்திய சோதனை படித்திருக்கிறான். உண்மை அதுதான் கடவுள். இப்படிப் பேசிய மகான் எழுதிய சுயசரிதை அது. 'ஒரு கிழவி அவள் கட்டியிருந்த சேலை பழுது அடைந்து இருந்தது; அவளுக்கு மாற்றுப் புடவை தேவை என்று பட்டது. அதை வாங்கிக் கொள்ளக் கொடுத்தேன்' என்றான். அவனை அவள் சந்தேகித்ததே இல்லை. ஒரே ஒரு குணம் அவன் பொய் சொல்ல மாட்டான் என்பது தெரியும்.