பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 115 'உலகத்தில் எத்தனையோ கிழவிகள் இருக்கிறார் கள். இந்தக் கிழவிக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்? தருமம் செய்யத் தொடங்கினால் அதற்கு எல்லை ஏது?” 'தருமம் செய்வதாக இருந்தால் இந்த நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு ஆள் கிடைப்பார்கள். இந்தக் கிழவிக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்?" இதுதான் அவள் கேட்ட கேள்வி. பேச்சு வளர்கிறது. துருவித் துருவிக் கேட்கிறாள். "அவள் கொஞ்சம் பழக்கமானவள்” என்கிறான். 'அவள் எனக்கு வேண்டியவள்' என்கிறான் 'அவளுக்குத் தருவது என் கடமை' என்கிறான். 'யார் அவள்? அவள் ஆணித்தரமான கேள்வி. 'இதுவரை நான் எதுவும் எடுக்காமல் தந்திருக் கிறேன். இது மிகவும் அவசியம். நீ எண்ணிப் பார்த்தால் அதைப் பொருட்படுத்த மாட்டாய். ஒன்று குறைவதால் எதுவும் முழுகிப் போகாது. இதைப் பொருட்படுத்த மாட்டாய் என்றுதான் தந்தேன்.” அவள் அந்தக் கட்டைத் துக்கி எறிகிறாள். "இதை அப்படியே அந்தக் கிழவிக்குத்தா வேண்டாம் என்று சொல்லவில்லை. முதலில் கொடுத்து விட்டு மறுவேலை பாருங்கள்' என்று கச்சிதமாகக் கூறுகிறாள். 'உண்மையாகவா?” "ஆமாம்' 'உறுதியாகவா' "ஆமாம்” 'நிச்சயமாகவா’’ & & • * * ஆமாம