பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் - 117 எழுத்தில் அச்சிடப்பட்டு வெளியிட்டிருக்கிறார்கள். விலை கூடுதல்தான்; என்றாலும் நூலகத்தையே நம்பி வெளி யிடும் ஒரு சில தமிழ் நூல்களைப் போல் அல்லாமல் தரமாக இருந்தன. 'விலை கூடுதல்; அதனால்தான் நூலுக்கு மதிப்பு' என்று அந்த நிறுவனர் தெரிவித்தார். அந்தப் பேரறையில் மருந்து அலமாரிபோல் சில தமிழ் நூல்க்ளும் கொலுவில் வைத்திருந்தார்கள். சிலர் வாங்குவதாகத் தெரிவித்தார். - 'பாட புத்தகங்களை ஒட்டித்தான் தமிழ் வளர் கின்றது. ஆங்கிலம் போல் தமிழில் கதைகள் புதிய படைப்புகள் மிகுதி இல்லை” என்பது அவர் கண்டு உரைத்தது. - - அந்த ஆங்கில நூல்களில் ஒரு பக்கம் இந்திய எழுத்தாளர்கள் எழுதியவை; அடுக்கி வைக்கப்பட்டிருந் தன. அவர்களும் இந்தப் புராண இதிகாசங்களை நம்பித் தான் பேனா எடுக்கிறார்கள் என்பது தெரிந்தது; வாரியார் வாரிசுகள் இவர்கள். அந்தப் புத்தக நிறுவன அதிபருக்கு ஒரு புதிய ஆசை தமிழிலும் இந்த ஆங்கில நூல்களைப் போல அச்சிட வேண்டும். மக்கள் விரும்புகிறார்கள். தரமான எழுத்து வரவேண்டும். எழுத முடியுமா? புதிய முயற்சி. இந்த ஆசிரியர் அதாவது எழுதும் தொழிலை அவர் அறியாமலே ஏற்றுக் கொண்டவர். அவர் அங்கு அழைக் கப்படுகிறார். - இவர் சில நூல்களைத் தம் சொந்த முதலீட்டில் வெளி யிட்டிருக்கிறார். அதற்குமேல் செலவிட அவர் வீட்டு வரவு செலவு அனுமதிக்கவில்லை; அதனால் அந்த நிறுவனத்தை அணுகுகிறார்.