பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள்

119



அது அறிவுரை அல்ல; விதிமுறை; அணிந்துரை இல்லையென்றால் அதனை யாரும் விரும்பமாட்டார்கள். விற்க முடியாது என்பது அவர் தொழில் அனுபவம்.

இந்த தமிழுக்கு இது ஒரு புதிய சோதனையாக அமைகிறது.

அவர் தன் எழுத்தை நம்புகிறார். அந்த நம்பிக்கை யில் எழுதுகிறார். அணிந்துரை அதுவும் கொண்டு வந்து தந்தால்தான் அவர் வெளியிடுவார்; அது அவர் தன் மானத்தைத் தொட்டது.

அவர் எழுத்துக்கு அவர்தான் சான்று. வழக்குத் தொடுத்தால் சாட்சியில்லாமல் எடுபடுவது இல்ல. நூல் எழுதி வெளியிட்டால் அணிந்துரை உடன் அச்சிடா விட்டால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பது அந்த அதிபர் தந்த கருத்து.

யாரிடம் அணிந்துரை பெறுவது? அதற்கு என்று சில அறிஞர்கள் அணுகப்படுகிறார்கள். அவர்களை அணுகு வது; புத்தகத்தை நீட்டுவது; 'படித்துப் பாருங்கள்' என்று சொல்வது; தாங்கள் இதற்கு ஒரு அணிந்துரை தர வேண்டும் என்று வேண்டுவது பழங்காலத்து அரசர் களைப் புலவர்கள் பரிசுக்கு நாடியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கதைகள் நினைவுக்கு வருகின்றன.

சிலரிடம் சென்றால் அவர்கள் தராளமனப்பான்மை "நீயே எழுதி எடுத்துக் கொண்டு வந்து கொடு; பார்த்து என் பெயர் இட்டுத் தருகிறேன்" என்று சொன்னவர்களும் உண்டு. அதற்கு இவர் மனச்சான்று இடம் தரவில்லை. மற்றும் நூல் எழுதிவிட முடியும்; அதற்கு முன்னுரை, அணிந்துரை எழுதுவது மிகவும் சிரமம் என்பது இவர் அறிந்து ஒன்று.

"யாராவது 'அவார்டு' வாங்கியவர்களை அவர்களிடம் கேட்டு எழுதிக் கொண்டு வாருங்கள்" என்று