பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள்

121



"அப்படியும் நூல்கள் வருகின்றன. ஒரு கவிதை நூல் எழுதுவார்கள்; அதற்கு மதிப்புரைகள் என்று அதைவிட மிகுதியாகச் சேர்க்கிறார்கள். அமைச்சர்கள் தொடங்கிப் பல்கலைப் பேராசிரியர்கள், கவிஞர்கள் இந்த வரிசையில் படங்களைப் போட்டு வெளியிடுகிறார்கள்" என்று அவர் அனுபவத்தையும் அமைதியாகக் கூறுகிறார்.

வேறு வீழியில்லை. தான் எழுதும் சிறுகதைத் தொகுப்புக்கு எப்படியும் ஒரு பிரபலமானவரைத் தேடுவது என்று முயல்கிறார்.

பிரபலமானவர்கள் என்று ஒரு நூல் வெளியிடப் பட்டிருந்தது. அதைப் புரட்டிப் பார்த்து ஒரு பத்திரிகை ஆசிரியரின் பெயரைத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்.

இவர் எழுதிய எழுத்து கம்ப்யூட்டர் பொறியில் பிரதி எடுக்கப்பட்டு விட்டது. இரண்டு பிரதிகள் கேட்டுப் பெற்றால் அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.

கம்ப்யூட்டர் பொறியில் விரைவில் நூல வடிவு பெறுகிறது. கூடுதல் செலவுதான். ஆனால் உடைந்த எழுத்துகள்; அச்சுப் பிழைகள் பிழையும் திருத்தமும் இந்த மாதிரி குறைபாடுகள் இருப்பது இல்லை. வாசகர் களும் இந்தப் புதிய அச்சில் நூல்களைப் படிக்க விரும்பு கிறார்கள்.

ஒருமுறை பிரதி எடுத்துக் கொண்டால் அதை 'பிலிம்' எடுத்துக் கொண்டால் அதனைக் கொண்டு வேண்டும்போது எல்லாம் விரைவில் நூல் கொண்டு வர முடிகிறது. அச்சில் இது ஒரு பெரிய முன்னேற்றம். அணிந் துரை நூல் அச்சிட்ட பிறகுதான் வாங்க வேண்டும் என்பது இல்லை.

நூலைக் கண்ணால் காணும்போது இவர் மகிழ்ச்சி அடைகிறார். மண இதழ் அச்சிடும் முன் நிச்சயதார்த்தம்