பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



122

அறிமுகம்



நிகழ்ச்சியைச் சந்திப்பது போன்ற மகிழ்ச்சி இது; புத்தகம் நிச்சயம் வந்து விடும். அதன் நகல் தன் கையில் இருக்கிறது.

பத்திரிகை அலுவலகத்துக்கு நடந்து நடந்து அலுத்து விட்டது; சினிமா டிக்கெட் வாங்குவதற்கு கியூவில் நிற்பது போல ஒரு வேதனை. என்ன செய்வது! படம் பார்த்துத் தானே ஆக வேண்டும். அவரைப் பார்த்தாகி விட்டது.

பத்திரிகை தர்மம் அதை அவர் சுட்டிக் காட்டுகிறார். தான் எந்தக் கருத்தையும் தரக்கூடாது; மதிப்புரை தான் வெளியிடுவது நல்லது என்றார்.

"இருந்தாலும் தாங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு எழுத்தாளர்; நீங்கள் மற்றொரு சக தொழிலாளியை மதிக் கிறீர்கள். இது உங்கள் உரிமை" என்று எடுத்து வைக்க வேண்டி இருந்தது.

சரி அவர் கெடுவு வைத்தார். தையல் கடையில் துணி கொடுத்தால் நடக்கும் நடைதான். "பொறுங்கள் எழுதி விடுகிறேன்" என்று அவர் வைத்த கெடுவுகள் எரிச்சலை உண்டு பண்ணுகின்றன.

"இந்தக் கதைகள் எம் பத்திரிகையில் வெளியிடச் சிபாரிசு செய்கிறேன்" என்று ஒரு நூதன கருத்தைத் தெரிவித்தார். இவரைத் திருப்திப்படுத்தப் பேசிய முகமன் உரை அது.

"வெளியிட மாட்டீர்கள். ஒரு பக்கக் கதையில் இருந்து அரைப்பக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள். அதனையும் குறைத்து ஒரு வரியில் வெளியிடத் திட்டமிடும் காலம் இது; நீங்கள் என் முழுப் பக்கம் மூணுக்கு மேல் போகும் கதைகளை வெளியிட மாட்டீர். உங்கள் பத்திரிகை பாதிப்பு அடையும்” என்று கூறி அவரை விரைவில் எழுதித் தரத் துரிதப்படுத்த வேண்டி நேர்கிறது.