பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள்

123



இவர் வீட்டுக்கும் பத்திரிகை அலுவலகத்துக்கும் மிகுந்த தூரம் இல்லை. ஒரு கதை எழுதும் நேரம்தான். அதனால் இவரால் சலிப்பு இல்லாமல் போக முடிந்தது. ஆட்டோவில் போய் இருப்பார். கூடுதல் கட்டணம் கேட்பதால் அதில் ஏறுவதை அவர் கூடியவரை தவிர்த்தார்.

தேர்தல்கள் அனுபவம் உடையவர்கள் விடாது நெருக்குவது போல இவரும் விடாமல் தொடர்கிறார்.

இறுதியில் பத்துப் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர்கள் பத்திரிகைகளில் வெளிவரும் கற்பனையாக இவருக்குப் பட்டது. எதையும் மிகைப்படுத்தி எழுதுவது அவர் தொழில். "இந்த நாட்டிற்கு உடனடி தேவை சிறுகதைகள்; அவை எழுதாவிட்டால் இந்த நாடு முன்னேறாது; அரசாங்கம் இதை முதலில் கவனிக்க வேண்டும்” என்று எழுதியிருந்தார். குழாய் ரோடு தேவை என்று எழுதிப் பழக்கம்; அதன் பிரதிபலிப்பு இது. இரண்டு பக்கம் எழுதித் தந்தார். சிறுகதை என்றால் என்ன என்று அதற்கு ஒரு திறனாய்வுக் கட்டுரை எட்டுப் பக்கம்; எல்லாம் பத்துப் பக்கம் எட்டியது; இறுதியில், "இந்தப் புத்தகம் அழகாக அச்சிடப்பட்டுள்ளது," என்று எழுதி யிருந்தார்.

அதைப் படித்துப் பார்க்கிறார். சிறுகதை இலக்கியத்தின் இன்றைய தேவை அதற்குரிய காரணங்கள் இவற்றைச் சுற்றி வளைத்து இது உஜாலா விளம்பரத்தைப் போல உப்பு சப்பு இல்லாமல் இருந்தது. மற்றும் இது "உன் மனைவி கெட்டிக்காரி இதை இன்னும் ஒரு முறை சொல்லுங்கள்" என்பதைப் போலவும் சலிப்புத் தந்தது.

இவ்வளவு தாழ்வாகச் செல்ல முடியவில்லை. அணிந்துரை வாங்குவது நூலின் உள்ளடக்கத்தை மதிக் காது என்று அவருக்குப் படுகிறது.

மறுபடியும் அண்ணாசாலை அந்தப் புத்தக நிறு வனரைப் பார்க்கச் செல்லவில்லை.