பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இணைக் கல்வி பரப்பரப்பான பத்திரிகைத் தலையங்கம்; இதை வைத்துத் தானே தொடக்க விழாவை நடத்துகிறோம்” இது டைரக்டரின் புலம்பல். இந்த மாதிரி காட்சிகளை சென்சார் பலகை தடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த உரையாடல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வேறு வழியில்லை; காதலை விட்டுவிட்டு உருப்படி யான படங்களை எடுப்பது என்று முடிவு செய்வார்கள். 'ஏன்டி காலேஜிக்கு வரலை?” 'பிடிக்கலை; எதுக்குப் போகணும்?” "படிக்க” அதற்கு அஞ்சல் வழிக் கல்வி நிலையம் இருக்குது; பணம் கட்டினால் நோட்சு அனுப்பறாங்க; தேவைப்பட்டால் டியூசன். ஒய்வு பெற்ற பேராசிரியர்கள் நிறைய டுடோரியல் நிறுவனங்கள் நடத்துகிறார்கள்:” 'ஏன் வரமாட்டேன் என்கிறே?’’ "த்ரில் இல்லை; என்னை யாரும் பின்பற்றப் போவது இல்லை; விழிகள் வழிகளில் தடுத்து நிறுத்தப் போவது இல்லை; உடுத்தும் உடை எடுக்கும் நடை அனைத்தும் வெறும் எடைதான்; வீண், ரசிகர்கள் இல்லாமல் எப்படிப் பாட்டுப் பாட முடியும். ரசிப்பவர் இல்லை என்றால் இந்தப் பெண் ஜென்மமே வீண். இது எல்லாம் விளக்கிக் கொண்டிருக்க முடியாது.” இப்படியும் ஒரு சில கல்லூரி வளாக உரையாடல் நிகழ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் பேசுவது நமக்கு எங்கே கேட்கிறது? இது இந்தப் பருவ நிகழ்ச்சி, பத்திரிகைகள் இதைப் பிரச்சாரம் செய்தன, ஒரு பஸ்சும் ரயிலும் மோதிக் கொண்ட பிறகு நில் கவனி செல்’ இந்தப் பிரச்சாரங்