பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. - இணைக் கல்வி கோவை தமிழில் இவ் உரையாடல் நடைபெற்றது. "எங்கள் பள்ளி நல்லாசிரியர் விருது வாங்கிய முதல்தரப் பள்ளி, ஒழுக்கத்திற்குப் பேர் போனது; நன் றாகத்தானே படிப்பிக்கிறோம்” என்று அவர் தம் பள்ளி யின் சுய சரிதத்தைச் சுருக்கமாக உரைக்கிறார். "அதெல்லாம் இல்லைங்க! உங்க பள்ளியில் "ஈவ்டிசிங்க், என் மகள் இங்கே படிக்க முடியாது” ஆசிரியர்க்கு இது விளங்கவில்லை. அந்தப் பள்ளி ஆரம்பப்பள்ளி; அந்த மாணவி எல்.கே.ஜி.; இந்தப் பெண் அவளைப் பார்த்து ஒரு இளந்தளிர் ஈவ்டீசிங்க், அவரால் நம்பமுடியவில்லை. "அவள் வகுப்பு மாணவன் என் பெண்ணைப் பார்த்து "ஐ லவ் யூ” என்று கூறியதாக இதைச் சொல்லி இருக்கிறாள்'. . . 'ஐ ஹேட் யூ என்று சொல்லவில்லையே! நான் நேசிக்கிறேன் என்ற தானே கூறி இருக்கிறான்? இதிலே என்ன தப்பு?” . 'இல்லைங்க இவன் சினிமாவைப் பார்த்துக் கற்றுக் கொண்டது; அதே டைலாக்தான் இது டி.சி. கொடுத்து விடுங்க.” . 'தவறு இல்லையே! இணைக் கல்வியின் நோக்கமே இந்த ஈவ் டீசிங்கைத் தவிர்ப்பதற்குத்தான்; ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையங்களில் இந்த இழுபறி நடப்பது இல்லை; பிரித்து வைப்பதால்தான் இந்தத் தவறுகள் நடக்கின்றன. காதல் வாழ்வின் ஒரு பகுதி தானே. அதற்கு அடிக்கல் இங்கே இவன் நாட்டி இருக் கிறான். இதில் என்ன தவறு? பெண்ணை மதிப்பது மட் டும் போதாது, நேசிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்: அதைத் தடுப்பது கூடாது' என்று அறிவுரை கூறுகிறார்.