பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 129 சாரி அவசரப்பட்டுவிட்டேன். இதைப் பத்திரிகை கள் பிரகடனப்படுத்திவிட்டன. அதனால் அடைந்த அதிர்ச்சி; மன்னிக்கவும்.’’ என்று கூறி விடை பெறு கின்றாள். மறுபடியும் அந்த அலமு பக்கத்தில் நெருங்குகிறாள். சாரி ஜான்! நான் செய்தது தப்பு: சீரியஸா எடுத்துக் கிட்டேன்; மன்னித்துவிடு' என்றாள். 'டேக் இட் ஈசி' என்றான் அவன்; அது ஏதோ பாட்டில் அவனுக்குப் பழக்கமாகிய வரி. "I Love You" என்று அவள் ஆங்கிலத்தில் பதிலுக்குக் கூறினாள். 22 போயிருக்கக் கூடாது 9. 'நீங்கள் கட்டாயம் திருமணத்துக்கு வர வேண்டும்' ஏன் இவர் தன்னை அழைக்கிறார்? கட்டாயம் என்ற சொல் எப்படிப் பொருந்தும்? 'வர முயற்சிக்கிறேன்' என்பது இவர் சம்பிரதாய மான பதில். அவர் விடுவதாக இல்லை. 'இல்லை; அவசியம் வர வேண்டும்' இது அவர் அழைப்பு.